செய்திகள் :

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா: மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள்

post image

விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழா என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் குளக்கரையில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு மீன்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ராஜகிரி, குளவாய்பட்டி கருங்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். 2 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் 2 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மீன்களைப் பிடித்து சென்றதால் விழாவில் பங்கேற்ற யாருக்கும் மீன் சிக்காதது மீன் பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருங்குளத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து 10 க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அதிகாலையிலேயே குளக்கரையில் திரண்டனர். காலை 7 மணியளவில் ஊர் முக்கியஸ்தர் வெள்ளை துண்டு வீசி அனுமதி அளித்ததைத்தொடர்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் உடன் குளத்துக்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களை தேடினர்.

குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கையோடு கொண்டு வந்திருந்த சாக்கு பையில் மீன்களை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம் என்று வந்தவர்கள் வெறும் பைகளுடன் வீடுகளுக்கு சென்றனர். என்னதான் மீன் குஞ்சுகளை வாங்கிவிட்டு வளர்தபோதும் குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வலை, தூண்டில் உள்ளிட்டவைகள் மூலம் சில சமூக விரோதிகள் மீன்களைப் பிடித்து சென்று விடுகின்றனர்.

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

இது இங்கு மட்டுமல்ல மற்ற பெரும்பாலான குளங்களிலும் இதேநிலையே நீடித்து வருகிறது. இதுவரை 3 குளங்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மீன்கள் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையே இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பழ. நெடுமாறன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்கு... மேலும் பார்க்க

மார்ச் 12-ல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நாளை மறுநாள்(மார்ச் 12) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.அவரை பாதித்திருக்கும் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் ... மேலும் பார்க்க

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், க... மேலும் பார்க்க