செய்திகள் :

`திமுக-வினர் நாகரீகமற்றவர்கள்’ - சர்ச்சையாக பேசிய Dharmendra Pradhan ; கொதித்த திமுக எம்.பிக்கள்

post image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்துகேள்வியெழுப்பினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக எம்.பி
தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக எம்.பி

`மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவி’

தன்னுடைய உரையில் தமிழச்சி தங்கபாண்டியன், ``தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால், பி.எம் ஸ்ரீ திட்டத்தின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ரூ. 2,000 கோடியை வேறு மாநிலங்களுக்கு பகிரப்படுருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவது எதிரானது. பள்ளி கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை, மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இது பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் உறுதிசெய்ய வேண்டும். " என்று கோரிக்கை விடுத்தார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

அதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ``திமுக நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்." என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் திமுக எம்.பிக்கள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தர்மேந்திரா பிரதான், தனது பேச்சு புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க

Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?

இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவர... மேலும் பார்க்க

நகைக்கடனில் புதிய விதிமுறை: `ஏழை மக்களை வாட்டும்’ - RBI திரும்பப்பெற வலியுறுத்தும் சீமான்

ரிசர்வ் வங்கி பழைய விதிமுறையின்படி, வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டி, மறு அடமானம் வைக்கலாம். ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய விதிமுறையின்படி, இனிமேல... மேலும் பார்க்க

மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் சொல்வதென்ன?

சமீபத்தில் வெளி வந்த சாவா என்ற இந்தி படம் சத்ரபதி சிவாஜி மகன் சத்ரபதி சாம்பாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சத்ரபதி சாம்பாஜியை மொகலாய மன்னன் ஒளரங்கச... மேலும் பார்க்க

`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்த மோதல்| முழு விவரம்

நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க எம்.பி எழுப்பிய கேள்விஎழுப்பியதற்கு, `நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்... மேலும் பார்க்க

`திமுகவுக்கு எதிரான பிளான்... எடப்பாடிக்கு என் ஆதரவு’ - சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்வி கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இது நம் குழந்தைகளுக்கு எழு... மேலும் பார்க்க