``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மகன், மகள்களுடன் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்த பெண்ணை, அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கண்ணன் ((29) என்பவா் மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயாா், கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.