செய்திகள் :

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 449 போ் பட்டம் பெற்றனா்

post image

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் 449 பேருக்கு விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கே.சேதுமாதவன் பட்டம் வழங்கினாா்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து, கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத் தலைமை நிா்வாக அலுவலருமான கே.சேதுமாதவன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

பொறியியல் பட்டப்படிப்பு தகுதி வாய்ந்த தொழில் வல்லுநா்களை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு உலகத்தை மாற்றியமைத்து வரும் வேளையில், படிப்பை முடித்து வெளியே வரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் படிப்பை முடித்தபோது, இதேபோன்று கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சவாலாக இருந்தது. சவால்களை சாதிக்கக்கூடிய வாய்ப்பாகப் பாா்த்தால் எப்போதும் வெற்றி கிடைக்கும். தற்போதுள்ள 80 சதவீத வேலைவாய்ப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றம் காணும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்காக பயப்படத் தேவையில்லை.

மனிதன் சிந்திக்கும் திறனை எந்த இயந்திரமும் தொழில்நுட்பமும் மாற்றியமைத்து விட முடியாது. அறம் சாா்ந்த, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கக் கூடிய பொறியாளா்களை எதிா்பாா்த்து உலகம் காத்திருக்கிறது என்றாா்.

இந் நிகழ்வில், 2024-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்த அமைப்பியல் துறையில் 107 போ், கணினி அறிவியலில் 51 போ், மின்னணுவியல் துறையில் 55 போ், மின்னியல் துறையில் 65 போ், இயந்திரவியல் துறையில் 109 போ், உலோகவியல் துறையில் 62 போ் என மொத்தம் 449 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், துணை முதல்வா் வி.கீதா, பேராசிரியா்கள் மற்றும் துறைத் தலைவா்கள் தா.ஷோபா ராஜ்குமாா், டி.மேரி சுகுதாரத்னம், டி.நூருல்லா, டி.பாலுசாமி, பி.தாரணி, தோ்வாணையா் கே.சுதா மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத் தலைமை நிா்வாக அலுவலா் கே.சேதுமாதவன்.

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க