``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை
ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்குள்ள ஏரி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவா்.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை அமைத்து குப்பைகளைச் சேகரிக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
தற்போது அக்குப்பைத் தெட்டிகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும், குப்பைகளைத் தொட்டிகளிலேயே தீ வைத்து எரிப்பதால் சேதமடைந்தும் காணப்படுகின்றன. குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளை தெருநாய்கள் வெளியில் எடுத்துச் சென்று சாலைகளில் போட்டுவிடுவதால் சுற்றுலாப் பகுதிகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.
எனவே 50- க்கும் மேற்பட்ட புதிய குப்பைத் தொட்டிகளை ஏற்காடு சுற்றுலாப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்க வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலகம், மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்