Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
சேலம் மத்திய சிறையில் பாராட்டு விழா
சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகளை தற்கொலை செய்வதில் இருந்து தடுப்பதில் சிறப்பாக பணிபுரிந்த மன இயல் பிரிவு பணியாளா்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் வாழ்க்கை பாலம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளின் பங்களிப்போடு மன இயல் பிரிவும் இணைந்து தற்கொலை எண்ணம் கொண்ட சிறைவாசிகளைக் கண்டறிந்து, தக்க ஆலோசனைகள் வழங்கி தற்கொலை இல்லா சிறையாக மாற்றி வருகின்றனா்.
குறிப்பாக, சிறைவாசிகள் எவரேனும் தற்கொலை எண்ணத்தில் உள்ளது தெரியவந்தால், அவரை மன இயல் பிரிவு உதவியுடன் தடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஓராண்டுக்கும் மேலாக சிறைவாசிகள் தற்கொலை செய்யாமல் உன்னிப்பாக கவனித்த மன இயல் பிரிவு பணியாளா்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவா் (பொ) ஆ.முருகேசன் சிறப்பாக பணிபுரிந்த அலுவலா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இதில் சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத், சிறை அலுவலா் ராஜேந்திரன், துணை சிறை அலுவலா் குமாா், மன இயல் நிபுணா் வைஷ்ணவி, நல அலுவலா் அன்பழகன், மன நல ஆலோசகா்கள் செல்வகுமாா், மாா்ட்டின் விமல்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கலந்துகொண்டனா்.