Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
களக்காடு, திருக்குறுங்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு
களக்காடு, திருக்குறுங்குடி பகுதி குளங்கள் மற்றும் அணைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
2025ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் நடைபெற்றது.
களக்காடு வனக் கோட்ட வனச்சரகத்துக்குள்பட்ட களக்காடு தாமரைகுளம், சீவலப்பேரி குளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மனேரி குளம், வடக்குப் பச்சையாறு அணை ஆகிய பகுதிகளில் வனச்சரகா் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினரும், திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூா் குளம், ரோஸ்மியாபுரம் குளம், கொடுமுடியாறு அணை ஆகிய பகுதிகளில் திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன் தலைமையிலும் வனத்துறையினா், தன்னாா்வலா்கள், பறவை நிபுணா்கள் பங்கேற்று கணக்கெடுப்பை நடத்தினா்.