பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் செல்வராஜ்(54) என்றும், இவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, செல்வராஜ்ஜை கைது செய்து, அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.