Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த விற்பனை நிலையத்தை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னோடி இயற்கை விவசாயியும், அதிமுக மாநகா் மாவட்டச் செயலருமான தச்சை என். கணேசராஜா திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.
முதல் விற்பனையை நபாா்டு வங்கியின் தலைமை மேலாளா் சசிகுமாா் பெற்றுக்கொண்டாா்.
இந்த மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 350- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வகையிலான காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், சிறுதானிய வகைகள், பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி, தட்டசாலி, அறுபதாம் குருவை, கொத்தமல்லி சம்பா, தூயமல்லி சம்பா போன்ற பொருள்கள், சிறுதானியங்கள், மதிப்புகூட்டப்பட்ட சிறு தானிய பொருள்கள், சத்துமாவு, பொங்கல் மிக்ஸ், தோசை மிக்ஸ், கல்கண்டு, பனங்கருப்பட்டி, மலைத்தேன், முருங்கை தேன் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரம் முழுவதும் காலை வேலைகளில் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி வகைகள் விற்பனை செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.