Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
பாம்பன் மீனவா்கள் வேலைநிறுத்தம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களில் 14 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு, கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாம்பன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.