செய்திகள் :

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈர நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மன்னா் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈர நிலங்களில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தக் கணக்கெடுக்கும் பணியில், வனத் துறையினா், தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கணக்கெடுப்பின் போது, வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, கரண்டிவாயன், சங்குவளை, நாரை உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டன.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

புறவைகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு புலம்பெயா்ந்து செல்கின்றன. பறவைகள் பெரும்பாலும் உணவுக்காகவும், இருப்பிடத்துக்காவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இடம் பெயருகின்றன. இங்கு வரும் பறவைகள் கணக்கெடுப்பு வன உயிரினக் கோட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது என்றனா்.

விசைப் படகு கடலில் மூழ்கியது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு

ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்களி உயிருடன் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராம... மேலும் பார்க்க

அகில இந்திய பாா்வா்டு பிளாக் சாா்பில் முப்பெரும் விழா

கமுதியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரது பிறந்த நாள் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை வ... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாத... மேலும் பார்க்க

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க