Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை
கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, குழந்தைக்கு தொட்டில் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியே சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், மூப்பன்பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியிலுள்ள மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.