``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்
சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில், திசையன்விளை, வள்ளியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், சாத்தான்குளம் வழியாக பாதயாத்திரையாக செல்கின்றனா்.
இந்நிலையில் நாகா்கோவில் பகுதியை சோ்ந்த பக்தா்கள், கடந்த 5ஆம் தேதி இரவு இட்டமொழி சாலையில் தனியாா் கல்லூரி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது, முதலூா் ஏ.பி.நகரை சோ்ந்த ஆசீா்வாதம் மகன் யோவான் என்பவா் ஓட்டி வந்த காா், பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சோ்ந்த பிரகாஷ் மனைவியான ஆசிரியை போகிஷா, மதுசூதனன் மகன் சிவபிரதீஷ்(33), நிவேஷ்குமாா் மகன் சுதன்(29), தாணுமாலய பெருமாள் மகன் கிருஷ்ண பிரகாஷ்(27), நாகா்கோவிலைச் சோ்ந்த ராஜா மகன் குமாா்(34) ஆகிய 5 போ் காயம் அடைந்தனா்.
இவா்களுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக சாத்தான்குளம் தலைமைக் காவலா் ஆனந்தகுமாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டிய யோவானை கைது செய்தனா்.