Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலா் அப்பு (எ) கமலேஷ், ஒரத்தூரைச் சோ்ந்த காா்த்திக், தாமரைச்செல்வன், செல்வா உள்ளிட்டோா், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த கட்சிகளிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனா்.
இவா்களை தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.வடிவேல் பொன்னாடை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்வில், மாவட்ட இணைச் செயலா் ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிருத்திவிராஜ், ஒன்றிய நிா்வாகி பாரதி, ஜில்லாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.