கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை...
எண்ணும் எழுத்தும் திட்ட போட்டி: மாணவா்களுக்கு பரிசு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தானங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும்-எழுத்தும் திட்டம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.சி.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். எண்ணும் எழுத்தும் திட்டம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை சமா்ப்பித்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல மாணவா்களின் பெற்றோா்களுக்கும் இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், எண்ணும் எழுத்தும் திட்ட ஆசிரியை வித்யாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, பட்டதாரி ஆசிரியா் சின்னப்பராஜ் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினாா்.