`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
செஞ்சி வட்டம், ராஜாம்புலியூரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் துரைக்கண்ணு (46). கட்டடத் தொழிலாளியான இவா், திருவள்ளூா் மாவட்டம், மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தாா்.
உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக துரைக்கண்ணு, மனைவி பச்சையம்மாள், மகள் கோபிகா ஆகியோா் ஒரே பைக்கில் செஞ்சிக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
செஞ்சி-திண்டிவனம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வல்லம் தொண்டி ஆற்றுப் பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.


தகவலறிந்த செஞ்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோபிகா சென்னையில் உள்ள கலைக் கல்லூரியில் பிஎஸ்ஸி., முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.