சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கும் இடையேயான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இரு நாடுகளும் விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் டோட் மெக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இது முடிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஒத்துழைப்புக்கு இது அடித்தளம் அமைத்துள்ளது.
இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இருதரப்பு வளர்ச்சி மற்றும் நாட்டின் வளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நியூசிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் தொழில் துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளையும், நுகர்வோரையும் பெற இயலும். அதுவே இப்பேச்சுவார்த்தையின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!