சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!
கிட்டத்தட்ட உறுப்பே இல்லை... கலங்கி நின்ற கணவன், துணை நின்ற மனைவி! | காமத்துக்கு மரியாதை - 233
இப்போ எனக்கு மேரேஜ் செஞ்சுக்க விருப்பமில்லைன்னு ஓர் ஆண் சொன்னா, அவனோட குடும்பத்தினர் மட்டுமில்லாம, அவனோட காதலியும் அதை சீரியஸா எடுத்துக்கணும். அந்த ஆண் சொல்றதை பொருட்படுத்தாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா இந்த மாதிரியும் பிரச்னை வரலாம். அப்படியென்ன பிரச்னைன்னு கேட்கிறீங்களா? செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் சொல்றதைக் கேளுங்க..!
’’அந்த தம்பதிக்கு கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகியிருக்கும். ரெண்டு பேரோட முகத்துலேயும் அழுத்தமான சோகம் அப்பிக் கிடந்துச்சு. ஆனா, அதையும் மீறிக்கிட்டு ரெண்டு பேரும் சிரிக்க முயற்சி செஞ்சாங்க. என் எதிர்ல உட்காரப்போகூட கணவனோட கையை தன்னோட கைக்குள்ள ஆதரவா பிடிச்சி வெச்சிருந்தாங்க அந்த மனைவி. இவ்ளோ அன்பா இருக்கிறவங்களுக்குள்ள அப்படியென்ன பிரச்னை வந்திருக்கும்னு யோசிச்சபடியே, விசாரிக்க ஆரம்பிச்சேன். நீங்க டாக்டர்கிட்ட முதல்ல பேசுங்கன்னு சொல்லிட்டு அந்தப்பொண்ணு ரிசப்ஷனுக்குப் போயிட்டாங்க.

அந்த ஆண்கிட்ட பேச ஆரம்பிச்சேன். அவருக்கு கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லைன்னு சொல்லலாம். விந்துப்பையும் இல்லை. யூரின் போறதுக்கு மட்டும் கயிறு மாதிரி ஆணுறுப்பு இருந்துச்சு. இத வெளியில சொல்ல கூச்சப்பட்டுக்கிட்டுதான் பெத்தவங்ககிட்டேயும், லவ் பண்ண பொண்ணுக்கிட்டேயும் ‘இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்’னு தள்ளிப்போட்டுக்கிட்டே வந்திருக்காரு. ஆனா, ஒருகட்டத்துக்கு மேல அவரால சமாளிக்க முடியலை. கல்யாணம் நடந்திடுச்சு. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு தன்னோட நிலைமையை காதலிகிட்ட சொல்லி அழுதிருக்கார். ஆரம்பத்துல, ‘இத ஏன் முன்னாடியே சொல்லலை’ன்னு கோபப்பட்டாலும், ஒரு செக்ஸாலஜிஸ்ட்டை பார்த்தா எல்லாம் சரியாகிடும்னு ஆறுதல் சொல்லியிருக்கார். மறுநாள்ல இருந்து சொந்தக்காரங்க, நண்பர்கள் வீட்டு விருந்துகளுக்குப் போக ஆரபிச்சிருக்காங்க. அவங்க என்னதான் நார்மலா காட்டிக்கிட்டாலும், வீட்டுப் பெரியவங்க ‘புதுசா கல்யாணமானவங்க நடுவுல ஏதோ சரியிலையேன்னு விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுக்கு மேலயும் தாமதிக்கக்கூடாதுன்னு என்கிட்ட சிகிச்சைக்கு வந்துட்டாங்க.
அந்த ஆணுக்கு ஹார்மோன் பரிசோதனைகள் எடுத்துப் பார்த்ததுல ஹார்மோன் அளவுகள் ரொம்ப ரொம்ப குறைவா இருந்துச்சு. என்னோட அனுபவத்துல அவரோட பிரச்னையை சரி செஞ்சுட முடியும். ஆனா, அதுக்கு சில வருடங்கள் கட்டாயம் ஆகும். அதுவரைக்கும், வீட்டை நீங்க ரெண்டு பேரும் தைரியமா இருக்கணும்னு சொன்னேன். நான் பார்த்துக்கிறேன் டாக்டர்னு தைரியமா சொன்னாங்க அந்தப் பெண். அந்த ஆணும், ‘நான் இவங்களை ரொம்ப லவ் பண்றேன் டாக்டர். கல்யாணத்துக்கு முன்னாடி உண்மையை சொன்னா, இவங்களைப் பிரிய வேண்டி வருமோன்னு பயந்துதான் சொல்லலை. நல்லவேளையா இவங்களும் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டாங்க’ என்றார் கண்கலங்கியபடி.

அவருக்கு முதல்ல ஹார்மோன் சிகிச்சை கொடுத்தேன். லேசா தாடி, மீசை வளர ஆரம்பித்தது. அடுத்து, Follicle-stimulating hormone (FSH) கொடுத்தேன். விந்துப்பைகளே இல்லாதிருந்த இடத்துல, லேசான புடைப்புமாதிரி மாற்றம் வர ஆரம்பிச்சது. ஸோ, ஹார்மோன் சிகிச்சை சரியா வேலைபார்க்குதுன்னு தெரிஞ்சுது. அவரும் அவரோட மனைவியும் இன்னும் நம்பிக்கையா வர ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட மூணு வருஷங்கள்... அவருக்கு தாடி, மீசை, ஆணுறுப்பெல்லாம் நார்மலா வளர்ந்திடுச்சு. மெல்லிசா கயிறு மாதிரி இருந்த ஆணுறுப்பு ஒரு வளர்ந்த ஆணுக்காக வளர்ச்சியோட மாறுச்சு. எல்லாரையும் மாதிரி செக்ஸ் வாழ்க்கை அவருக்கும் கிடைச்சிது. இன்னிக்கு மருத்துவம் ரொம்ப வளர்ந்திடுச்சு. பிரச்னைகளை உங்களுக்குள்ளேயே மறைச்சு வைக்காம, மருத்துவர்களை கன்சல்ட் பண்ணுங்க. இன்னிக்கு நிலைமைக்கு ஆணுறுப்பு சின்னதா இருக்கு; விதைப்பை இல்லைங்கிறதெல்லாம் பிரச்னையே இல்ல... தொடர்ந்து சிகிச்சைக்கொடுத்தா சரி செஞ்சுடலாம். இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா, இந்தப் பிரச்னையை எந்த வயசிலும் சரி செய்ய முடியும்கிறதுதான். இந்த சம்பவம் மாதிரி பாதிக்கப்பட்ட ஆணுக்கு, அவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராவது துணையா இருந்தா, சம்பந்தப்பட்டா ஆண் இன்னும் சீக்கிரமா பிரச்னையில மீளுவார்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.