செய்திகள் :

Women Sexual Health: உச்சக்கட்டத்திலும் பெண்ணுக்குச் சம உரிமை இல்லை... தீர்வு என்ன?

post image

பெண்களுக்கும் தாம்பத்ய உறவின்போது ஆர்கசம் எனும் உச்சகட்டம் வரும்; வர வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் உறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஆர்கசத்தை அனுபவிப்பதில்லை என்கின்றன சில புள்ளி விவரங்கள்.

ஆணுறை நிறுவனம் ஒன்று 2017 மற்றும் 2019-ம் வருடங்களில் #OrgasmInequality என்ற ஹேஷ்டேகில் பெண்களின் ஆர்கசம் பற்றிய சர்வே ஒன்றை நடத்தியது. அது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் நடிகை வித்யா பாலன், 'ஆண்களைப் போலவே பெண்களும் உச்சகட்டத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கும் அது தேவைதான்' என்று குரல் கொடுத்திருந்தார். இன்னொரு பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கரோ, 'ஆணாதிக்க மனப்பான்மையே பெண்ணுக்கான ஆர்கசத்தை மறுத்து வருகிறது. படுக்கையிலாவது பெண்களுக்குச் சம உரிமை கொடுங்கள்' என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

செக்ஸில் திருப்தி அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, பெண்ணுறுப்பில் ஆர்கசம் அடையக்கூடிய பகுதிகள் அறுத்தெறியப்பட்ட ஆப்பிரிக்க பெண்களை இந்த இடத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. பெண்ணின் இந்தத் தேவை ஏன் நிரப்பப்படாமலேயே இருக்கிறது? பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் பேசினோம்.

Couple I Sex

''தாம்பத்ய உறவில் உச்சகட்டம் என்பது இருவருமே அனுபவிக்க வேண்டிய ஒன்று. 'தாம்பத்ய உறவு என்பது பிள்ளை பெற்றுக்கொள்வதற்கான வழி, அதைத்தாண்டி இதில் பெண் இன்பமடைவதற்கு ஒன்றுமில்லை' என்றே உலகம் முழுக்க பல நாட்டினரும் இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக ஆணாதிக்க மனப்பான்மை. 'என் வேலை முடிந்தது' என்று திரும்பிப்படுத்துத் தூங்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ஆண்கள். மூன்றாவதாக, இது பற்றிய விழிப்புணர்வின்மை.

'உன் கணவனுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்' என்று பெண்ணுக்குச் சொல்லித் தருகிற சமூகம், 'உன் மனைவிக்கும் இன்பம் கிடைக்கும்வரைக்கும் உறவு நீடிக்க வேண்டும்' என்று ஆண்களுக்குச் சொல்லித்தருவதில்லை. கல்வியும் தலைமுறை மாற்றமும் பெண்களை இப்போது பேச வைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகப் பெண்கள் உலகில் மாற்றங்கள் ஜெட் வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆண்கள் உலகிலோ அவை ஜட்கா வேகத்தில்தான் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. ஆர்கசத்திலும் சமபங்கு பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். அப்போதுதான் அடுத்த தலைமுறையிலாவது இது சரி செய்யப்படும்.

போதிய பாலியல் கல்வியின்மை, ஆணும் பெண்ணும் சமம் என்று பெற்றோர் சொல்லி வளர்க்காதது ஆகிய இரண்டும்தான் ஆண்கள் இந்த விஷயத்தில் கோட்டைவிடுவதற்கு மிக முக்கியமான காரணங்கள். ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் சென்றாலே ஆணுக்கு இந்த விஷயத்தில் தெளிவு கிடைத்துவிடும்.

Dr. Narayana Reddy

மது அருந்துதல், போதைப்பழக்கம், ரத்த அழுத்தம், இதயநோய், உளவியல் பிரச்னை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்கிற மாத்திரைகளால் கணவனுக்கு விந்து முந்துதல் பிரச்னை ஏற்பட்டாலும், மனைவிக்கு ஆர்கசம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம்.

தனக்கு ஆர்கசம் கிடைக்கவில்லையென்றால், மனைவி அது பற்றி கணவனிடம் பேசலாம். அதைப் புரிந்துகொள்வதற்கான பக்குவம் கணவனிடம் இருக்கிறதா என்பதை மனைவி தெரிந்துகொள்ள வேண்டும். திருமணமான புதிதில் இது பற்றி பெண்கள் பேசாமல், இருவருக்குள்ளும் மனரீதியான புரிந்துணர்வு ஏற்பட்ட பிறகு தன் தேவையை எடுத்துச்சொல்லலாம். 'ஆர்கசம் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஏற்கெனவே ஏதாவது....' என்ற மனப்பான்மையிலிருந்து பெரும்பான்மை ஆண்கள் மாறவேயில்லை என்பதுதான் நிதர்சனம்'' என்கிறார் நாராயண ரெட்டி.

டாக்டர் ஷர்மிளா

''ஆணுறுப்பின் நுனியில் நரம்புகள் குவிந்திருப்பதால் ஆணுக்கு ஆர்கசம் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல. கிளிட்டோரிஸ் ஆர்கசம், வெஜைனல் ஆர்கசம், செர்விகல் ஆர்கசம், அல்லது இந்த மூன்றின் காம்பினேஷனில் கிடைக்கும் ஆர்கசம், பெண்ணுறுப்பின் 'G' ஸ்பாட்டில் கிடைக்கிற ஆர்கசம் என்று பலவகைகள் இருக்கின்றன. இவற்றில், எந்தப் பகுதியில் ஆர்கசம் கிடைக்கும் என்பதை வரையறுத்துக் கூற முடியாது. தவிர, பெண்ணுக்குத் தாம்பத்ய உறவு என்பது உடலுடன் மனமும் சேர்ந்தது. சூழல், உடல்நிலை, தனிமை, கணவர் மீது எந்த அதிருப்தியும் இல்லாதிருப்பது, அவர் மீதான அன்பு என்று பல புறக்காரணிகள் சரியாக இருந்தால்தான் பெண்ணால் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபட முடியும். அப்போதுதான் அவர்களுக்கு ஆர்கசமும் கிடைக்கும். இத்தனை காலம் கணவரின் பாலியல் தேவையறிந்து பெண்கள் வாழ்ந்து வந்தார்கள். இனி மனைவிகளின் தேவைகளைக் கணவர்களும் புரிந்துகொள்ளட்டுமே...'' என்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள்... ஏன் இந்த நிலைமை?

எதிர்ப்பாலினர் மீது பாலியல் உணர்வு வராத சிலரும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இதை 'ஏசெக்‌ஷுவல்' நிலை என்போம். ஆண், பெண் இரு பாலினத்திலும் ஏசெக்‌ஷுவல் நபர்கள் உண்டு என்றாலும், ஆண்களால் திருமண வாழ்க்கை... மேலும் பார்க்க

`இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' - மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை - 234

’’இளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க ... மேலும் பார்க்க

கிட்டத்தட்ட உறுப்பே இல்லை... கலங்கி நின்ற கணவன், துணை நின்ற மனைவி! | காமத்துக்கு மரியாதை - 233

இப்போ எனக்கு மேரேஜ் செஞ்சுக்க விருப்பமில்லைன்னு ஓர் ஆண் சொன்னா, அவனோட குடும்பத்தினர் மட்டுமில்லாம, அவனோட காதலியும் அதை சீரியஸா எடுத்துக்கணும். அந்த ஆண் சொல்றதை பொருட்படுத்தாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா இ... மேலும் பார்க்க

தாம்பத்திய உறவில் விருப்பமில்லாத காலம்... எப்படிக் கடப்பது? காமத்துக்கு மரியாதை 232

எல்லா பெண்களுமே வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குடும்பத்தினர் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட தன் நலனுக்குக் கொடுக்காத பல பெண்கள், 'த... மேலும் பார்க்க