பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!
சிங்கம் வந்துவிட்டது: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா!
காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 1இல் மட்டுமே வென்றுள்ளது.
இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ப்ராவின் வருகை மும்பை ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
பிஜிடி தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 3-1 என இந்திய அணி ஆஸி.யிடம் வீழ்ந்தது.
பின்னர், பும்ரா இல்லமலேயே சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.
ஏப்ரல் முதல் வாரத்தில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பும்ராவும் வந்துவிட்டார்.
“சிங்கம் தனது காட்டுக்குள் வந்துவிட்டது” என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
#MumbaiIndians#PlayLikeMumbai#TATAIPLpic.twitter.com/oXSPWg8MVa
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025