பங்குச்சந்தை: `இன்று 1000 புள்ளிகள் சரிந்த நிப்டி' - முதலீட்டாளர்கள் என்ன செய்ய ...
மும்பை - நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ. 75 லட்சம் (87,687 டாலர்) சம்பளத்தைவிட, மும்பையில் ரூ. 25 லட்சம் (29,229 டாலர்) வாங்குவது சிறந்தது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.
பொதுவாக, இந்தியாவைவிட சில வெளிநாடுகளில் ஊதியம் அதிகமாயிருப்பதால், அங்கு சென்று பணிபுரிய சிலர் விரும்புகின்றனர். வெளிநாடுகளில் ஊதியம் அதிகமிருப்பினும், அதற்கேற்றாற்போல செலவினங்களும் இருக்கும் என்பதை அறிய விரும்புவதில்லை.
இந்தியாவில், ஒரு பர்கரின் விலை ரூ. 100. ஆனால், நியூயார்க்கில் 20 டாலர்வரை செலவாகும்; 20 டாலர் என்பது, தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 1,720. இது கிட்டத்தட்ட 17 மடங்கைவிட அதிகம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வாங்கும் திறன் சமநிலையில் (Purchasing Power Parity) இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இது மற்ற நாட்டு கரன்சியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்குள் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது.
மும்பையில் மாதாந்திர செலவுகள், வீட்டு வாடகை அல்லாமல் ரூ. 33,042; நியூயார்க்கில் ரூ. 1,33,904. மும்பையின் நகரத்தினுள் வீட்டு வாடகை (1BHK) ரூ. 50.979; நியூயார்க்கில் ரூ. 3,44,591. மும்பையில் இணையச் செலவு (60 Mbps) ரூ. 739; நியூயார்க்கில் ரூ. 6,166. மும்பை உணவகத்தில் உணவு ரூ. 336; நியூயார்க்கில் ரூ. 2,152. மும்பையில் சராசரி ஊதியம் (வரிக்கு பின்) ரூ. 67,640; நியூயார்க்கில் ரூ. 5,66,039.
மும்பையில் 29,229 டாலருடன் (ரூ. 25 லட்சம்) வாழும் சராசரி வாழ்வை, நியூயார்க்கில் வாழவேண்டுமென்றால் 1,08,047 டாலர் (ரூ. 92.4 லட்சம்) தேவை. நியூயார்க்கில் ரூ. 75 லட்சம் ஊதியத்தைவிட மும்பையில் ரூ. 25 லட்சம் ஊதியத்துடன்கூடிய சராசரி வாழ்வே சிறந்தது என்கின்றனர், நெட்டிசன்கள்.
இதையும் படிக்க:பாம்பன் புதிய பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்!