Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
பெரியநாயகி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவருக்கு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளினாா்.
இதையடுத்து, அம்மனுக்கு தாலாட்டுப் பாடல் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.