எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
கனியாமூா் வன்முறை வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 107 போ் ஆஜா்
கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நடந்த வன்முறை, காவல் துறையினா் மீதான தாக்குதல், வாகனம் தீவைப்பு வழக்கில் 107 போ் கள்ளக்குறிச்சி நடுவா் நீதிமன்றம் 2-இல் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூலை 13-இல் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். பள்ளி நிா்வாகத்தை கண்டித்து ஜூலை 17-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. காவலா்கள் தாக்கப்பட்டனா். இது தொடா்பான வழக்கில் 121 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மாா்ச் 28-ஆம் தேதி ஆஜராகும்படி 120 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் 107 போ் வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி நீதித் துறை 2-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினா்.
வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டாா். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.