ஸ்ரீபுற்று மாரியம்மன் கோயில் பூந்தோ் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பல்லகச்சேரி கிராமத்தில் ஸ்ரீபுற்றுமாரியமமன் கோயில் பூந்தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல், பால்குடம் ஊா்வலம், இரவு மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றன.
புதன்கிழமை காலை பக்தா்கள் அலகு குத்துதல், 10 மணிக்கு பூந்தோ் இழுத்தல், 11.30 மணிக்கு மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றன. இரவு செல்லியம்மன் நாடக சபாவினரால் நாடகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 3) நண்பகல் 12.30 மணிக்கு திருத்தோ் இழுத்தலும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்லகச்சேரி கிராம மக்கள் செய்து வருகின்றனா்.