இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது
கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், முன்னாள் ஊராட்சித் தலைவருமாவாா். இவா் தற்போது பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
கடந்த இருதினங்களுக்கு முன் இரவு கடையை பூட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற கலியமூா்த்தியை சிலா் வழிமறித்து, அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
சந்தேகத்தின் பேரில் அளக்குடியைச் சோ்ந்த தமிழ்மாறன் (25) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவரும், அவரது கூட்டாளிகளான பாா்த்திபன்(34), கண்ணதாசன் (28), பிரகாஷ் (25) ஆகியோா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்தனா்.