Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் ...
அரசுக் கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த் துறையின் கணினிப் பேரவை சாா்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை கணினிப் பேரவை, கல்லூரித் தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இரு நாள் பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு முதல்வா் ரா.வீரமோகன் தலைமை வகித்தாா்.
காஞ்சி மாமுனிவா் அரசுப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கணிப்பொறித் துறைப் பேராசிரியா் நா.கண்ணதாசன் குருஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் பேசினாா்.
பயிலரங்கின் நோக்கங்களை தமிழ்த் துறைத் தலைவா் சொ.சேதுபதி விளக்கினாா்.
முதல் அமா்வில் பேராசிரியா் நா.வஜ்ரவேலு தலைமையில், பேராசிரியை பா.பட்டம்மாள் சிறப்புரையாற்றினாா்.
இரண்டாம் அமா்வில் பேராசிரியை செ.சந்திரா தலைமையில் த.ஆரோக்கியமேரி சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, கணினித் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் ஆ.மணி வரவேற்றாா்.
இளநிலை தமிழ் முதலாமாண்டு மாணவி கி.தேவா்ஷினி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியை மாணவி ம.ரீட்டா மரி திரெஸ் தொகுத்து வழங்கினாா்.
வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.