அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
புதுச்சேரி பல்கலை.யில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிதாக எக்ஸ்ட்ரூஷன் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து, பல்கலை. தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் புதிய எக்ஸ்ட்ரூஷன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், அத்துறை தலைவா் நாராயணசாமி சங்கீதா வரவேற்றாா். துணைவேந்தா் பிரகாஷ் பாபு எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
பதிவாளா் ராஜேஷ்புட்டானி, இயக்குநா் கே.தரணிக்கரசு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மையத்தின் நோக்கங்களை பேராசிரியா் ஜோசப் செல்வின் விளக்கினாா்.
எக்ஸ்ட்ரூஷன் என்பது தின்பண்டங்கள், பாஸ்தா, டெக்ஸ்சா்டு வெஜிடபிள் புரதம்,
செல்லப்பிராணிகளின் உணவு மற்றும் பலவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பல்துறை
உணவு உற்பத்தி செயல்முறை என விளக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்துகொண்டனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.