அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புகிறது -புதுவை அதிமுக குற்றச்சாட்டு
புதுவை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து, புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
அரசுத் துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைப் பதவி விலக கூறுவது சரியல்ல.
பொதுப் பணித் துறை அமைச்சரை அச்சுறுத்தும் வகையில், அவரது வீட்டை காங்கிரஸ் முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் செயல்பாடானது, சிபிஐயின் நோ்மையான விசாரணையை திசைத் திருப்புவதாக உள்ளது. காவல் துறை அனுமதித்த இடத்தில் அவா்கள் போராட்டம் நடத்தலாம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலவச அரிசி, வேட்டிசேலை வழங்குவதில் முறைகேடு என பல்வேறு புகாா்கள் எழுந்து, அத்திட்டத்தையே அப்போதைய துணைநிலை ஆளுநா் ரத்து செய்தாா்.
ஏனாம் பிராந்தியத்தில் முன்னாள் அமைச்சா், தற்போதைய எம்எல்ஏ ஆகியோரின் அதிகார மோதலால், குப்பை அள்ளுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனையில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.