David Warner: ``சினிமாவுக்குள் வருவது முதலில் பயமாக இருந்தது!'' - டோலிவுட் மேடையில் டேவிட் வார்னர்
டோலிவுட் நடிகர் நித்தின் மற்றும் ஶ்ரீ லீலா நடிப்பில் உருவாகியிருக்கிற `ராபின்ஹுட்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்ற ஒரு தகவலை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் பூஸ்ட் செய்திருக்கிறது படக்குழு.

டேவிட் வார்னர் டோலிவுட்டுக்கு மிகப்பெரிய ரசிகர் என்றே சொல்லலாம். `புஷ்பா' திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஶ்ரீ வல்லி பாடலுக்கு இவர் நடனமாடி பதிவிட்ட ரீல்ஸெல்லாம் வைரலானது.
நேற்றைய தினம் நடைபெற்ற `ராபின்ஹுட்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்விலும் ஶ்ரீ வல்லி பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் டேவிட் வார்னர். இந்த நிகழ்வில் நமஸ்காரம் சொல்லி உரையை தொடங்கியவர், `` கடந்த 15 வருடங்களாக எனக்கு அன்பையும் உறுதுணையையும் கொடுக்கும் உங்களுக்கு நான் மனதார நன்றிக் கூறிக் கொள்கிறேன்.

என்னுடைய இடத்திலிருந்து வெளியேறி சினிமா துறைக்குள் வருவதை எண்ணி நான் முதல் பயந்தேன். இந்தப் படத்தில் நான் நடித்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். இத்திரைப்படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்." என்றவர் இப்படத்தின் இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று தெலுங்கிலும் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX