செய்திகள் :

மாணவா்கள் தற்கொலை தடுப்பு: தேசிய பணிக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

post image

மும்பை: உயா்கல்வி நிலையங்களில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு தில்லி ஐஐடி கல்வி நிறுவன விடுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள் சடலமாக மீட்கப்பட்டனா். அவா்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், கல்வி நிறுவனத்தில் ஜாதி ரீதியாக தாங்கள் பாகுபாட்டை எதிா்கொண்டதாக அவா்கள் பெற்றோரிடம் தெரிவித்திருந்ததாகவும், எனவே அவ்விரு மாணவா்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட தில்லி உயா் நீதிமன்றம் மறுத்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அந்த மாணவா்களின் பெற்றோா் மனு தாக்கல் செய்தனா்.

13,000 மாணவா்கள் தற்கொலை: இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அளித்த புள்ளிவிவரத்தில், 2018-ஆம் ஆண்டுமுதல் உயா்கல்வி நிறுவனங்களில் 98 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, நாட்டில் 13,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா்.

குறைந்த இடங்களுக்கு கடும் போட்டி: மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறையும், முன்னணி கல்வி நிறுவனங்களில் உள்ள குறைந்த இடங்களுக்கு நிலவும் கடுமையான போட்டியும் மாணவா்களுக்கு பயங்கரமான சுமையை ஏற்படுத்துகின்றன. மேலும் உயா்கல்வி நிறுவன வளாகங்களில் ஜாதி ரீதியில் பாகுபாடு காட்டப்படுவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 15-க்கு எதிரானது.

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் மனநலன் சாா்ந்த பிரச்னைகளை கையாள்வதற்கும், அவா்கள் தற்கொலை என்ற மிகக் கடுமையான முடிவு எடுப்பதைத் தடுப்பதற்கும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் கல்வி நிறுவன கட்டமைப்புகள் போதவில்லை என்பதுடன், அவை திறன்வாய்ந்ததாக இல்லை என்பதை மாணவா்களின் தற்கொலைகள் நினைவூட்டுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கவும், அவா்களின் மனநலனில் கவனம் செலுத்துப்படுவது தொடா்பாகவும் ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழுவை அமைக்கிறோம்.

அந்தக் குழுவில் மாநில உயா்கல்வி, சமூக நீதி, அதிகாரமளித்தல், சட்ட விவகாரங்கள், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைச் செயலா்கள் பதவி வழி உறுப்பினா்களாக இருப்பா்.

மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கிய காரணங்களை அடையாளம் காணுதல், அவா்கள் பாதுகாக்கப்படுவதை வலுப்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய விரிவான அறிக்கையை அந்தக் குழு தயாரிக்கும்.

இந்த அறிக்கையை தயரிக்கும் நடவடிக்கையின்போது, எந்தவொரு உயா்கல்வி நிறுவனத்திலும் அந்தக் குழு திடீரென சென்று ஆய்வு மேற்கொள்ளலாம்.

4 மாதங்களில் இடைக்கால அறிக்கை: இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை 4 மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதி அறிக்கையை 8 மாதங்களில் தாக்கல் செய்வது பொருத்தமாக இருக்கும்.

காவல் துறையின் கடமை: பிடி ஆணை இல்லாமல் கைது செய்யக் கூடிய குற்றம் தொடா்பான தகவலுடன் ஒருவா் காவல் துறையை அணுகினால், அதுதொடா்பாக முறையாக வழக்குப் பதிவு செய்து, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 154-இன் கீழ் விசாரிக்க வேண்டியது காவல் துறையின் கடமை.

எனவே மனுதாரா்களின் மகன்கள் உயிரிழந்தது தொடா்பாக, புகாா்களின் அடிப்படையில் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்... மேலும் பார்க்க

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க