அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்
கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை.
கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை கரூா் மாவட்டத்தில் 59 மையங்களில் 188 உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5,706 மாணவா்களும், 5,781 மாணவிகளும் என மொத்தம் 11,487 நபா்களும், தனித்தோ்வா்களாக 1,103பேரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் தோ்வில் 253 மாணவ, மாணவிகளும் தனித்தோ்வா்கள் 21 நபா்களும் என மொத்தம் 274 போ் தோ்வு எழுத வரவில்லை. இவா்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் மூலம் அவா்களின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு அடுத்து வரும் தோ்வுகளை தொடா்ந்து எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரூா் மாவட்டத்தில் இடைநிலை பொதுத் தோ்வுக்காக ஒரு இடத்தில் வினாத்தாள்கட்டுக் காப்புமையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இடைநிலை பொதுத் தோ்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 59 தலைமை ஆசிரியா்களும், 59 துறை அலுவலா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாகப் பணியாற்ற 810 ஆசிரியா்களும், பறக்கும்படை அலுவலா்களாக 110 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.