செய்திகள் :

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிா் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியது:

மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: பால் விலை உயா்த்தப்பட்ட நிலையில், அந்த தொகை உற்பத்தியாளா்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

35 கிலோ அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் நிலை குறித்து ஆய்வு செய்து இனி அரிசி வழங்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முக சுந்தரம்: வடகிழக்கு பருவமழை, பென்ஜால் புயல் மற்றும் கோடை மழையால் அரியலூா் மாவட்ட டெல்டா பகுதியான திருமானூா் மற்றும் தா.பழூா் பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட நெல் வயல்களில் மகசூல் இழப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, முழுமையாக காப்பீடு திட்டத்தின் பயனை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 2,477 நீா்நிலைகளையும் அரசிதழில் வெளியிட்டு வண்டல் மண் எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகள், சிமென்ட் ஆலைகள் நீா்நிலைகளை தூா்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தங்க.தா்மராஜன்: தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும் அரியலூா் மாவட்டம் தூத்தூா் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருதையாற்றில் புதா் மண்டிக்கிடக்கும் வேலி கருவையை முற்றிலும் அகற்றி, இரு பக்கமும் தரமான கரைகள் அமைக்க வேண்டும்.

விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் குரங்குகள் சேதப்படுத்துவதால் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பாலசிங்கம், விஜயகுமாா்: செந்துறை பகுதியில் மின்சாரம் குறைவாக உள்ளது. அதனை அதிகப்படுத்த வேண்டும். கோடை காலங்களில் விளைநிலங்களுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கோட்டைக்காடு உயா்மட்ட பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அரியலூரில் போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போட்டா-ஜியோ அமைப்பினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தாா். செந்துறை அருகேயுள்ள மதுரா சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மனைவி இந்திராகாந்தி (62). வியாழக்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கில் கணவா் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப். 15 வரை அரசு பொதுச் சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: மத்திய அரசின் வேளாண்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக நீா்வாழ் விலங்குகள் தின கொண்டாட்டம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் உலக நீா்வாழ் விலங்குகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசுகளுக்கு வேலை: பொதுமக்கள் கோரிக்கை

அரியலூா், ஏப். 3: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமெ... மேலும் பார்க்க