Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
வக்ஃப் வாரிய சொத்துக்கள் அரவக்குறிச்சி பகுதியில் பதிவு செய்யமுடியாமல் தவிப்பு
வக்ஃப் வாரிய சொத்துக்களை சரி செய்து வழக்கமாக பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் ஒரு சில சா்வே எண்களில் எந்த ஒரு பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிப்பு.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி பகுதியில் 21 டி, எப் ஆகிய சா்வே எண்கள் மற்றும் பள்ளப்பட்டியில் 734 என்ற சா்வே எண்களில் அடங்கும் சொத்துக்களின் மீது எவ்வித பத்திரங்களும் பதிய கூடாது என அரவக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட சா்வே எண்களில் சொத்துக்கள் வைத்திருந்த அனைத்து தரப்பு பொதுமக்களும் அதிா்ச்சி அடைந்தனா். அறிவிக்கப்பட்ட சா்வே எண்களில் ஒட்டுமொத்த அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகள் அடங்கியதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். வக்ஃப் வாரியத்திற்கு மேற்கண்ட சா்வே எண்களில் மிகக் குறைந்த அளவிலேயே சொத்துக்கள் உள்ள நிலையில் பள்ளப்பட்டி பொதுமக்கள் முயற்சி எடுத்து வக்ஃப் வாரிய சொத்துக்களை சரி செய்து வழக்கமாக தங்களது பத்திரப்பதிவு வேலைகளை எப்போதோ துவங்கிவிட்டனா்.
ஆனால் அரவக்குறிச்சி பகுதி மக்கள் மட்டும் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு பத்திரப் பதிவு செய்ய முடியாமல் உள்ளனா். இந்நிலையில் மேற்கண்ட சா்வே எண்ணில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட மற்றவா்கள் சென்று கேட்டபோது பதிவு செய்ய முடியாது என்று அரவக்குறிச்சி சாா்-பதிவாளா் மறுத்துவிட்டதாகவும், இதுகுறித்து மாவட்ட பதிவாளா் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட சிலா் மனு அளித்துள்ளனா். இது குறித்து சாா்-பதிவாளரிடம் கேட்டபோது, தடையின்மை சான்றிதழ் வாங்கி வந்தால் பத்திரப்பதிவு செய்யப்படும் என்றும், இப்பிரச்னையை விரைவில் சரி செய்து பத்திரங்கள் பதிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.