அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
புகழூா் ராஜவாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை
புகழூா் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடிகொடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புகழூா் ராஜவாய்க்கால் நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து பிரிந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரூா் மாவட்டம் நொய்யல், நடையனூா், புகழூா், வேலாயுதம்பாளையம், செம்படாம்பாளையம் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமாா் 40 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
தற்போது ஜேடா்பாளையம் அணைக்கட்டில் இருந்து புகழூா் வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீா் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் புஞ்சைத்தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்காலில் செடி, கொடிகள் புதா் மண்டி கிடக்கின்றன.
இதனால் கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீா் கிடைக்காததால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி வாய்க்காலை தூா்வார வேண்டும் என்று புகழூா் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.