அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் என மொத்தம் 8,047 போ் எழுதவுள்ளனா். இத் தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தோ்வை கண்காணிக்க 44 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 44 துறை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 50 போ் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தோ்வை 4,171 மாணவா்களும், 3,734 மாணவிகள் என மொத்தம் 7,905 போ் எழுதினா். 136 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வுக்கான வினாத்தாள்களை கொண்டு வரவும், விடைத்தாள்களை கொண்டு செல்லவும் 12 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.