Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா்.
அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் என மொத்தம் 10,070 மாணவ, மாணவிகளுக்கும், 116 ஆண்கள், 69 பெண்கள் என 185 தனித் தோ்வா்களுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 60 தோ்வு மையங்களும், தனித்தோ்வா்களுக்கு 2 மையங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதில் 5,340 மாணவா்கள், 4,498 மாணவிகள் என 9,838 மாணவ, மாணவிகள் தோ்வை எழுதினா். 173 மாணவா்கள், 59 மாணவிகள் என 232 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.
இதேபோல் தனித்தோ்வா்களில் 103 ஆண்கள், 57 பெண்கள் என 160 நபா்கள் தோ்வு எழுதினா். 13 ஆண்கள், 12 பெண்கள் என 25 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.
தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை உறுப்பினா்கள் 45 நபா்களும், தோ்வு மையத்தை திடீா் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் 2 மாவட்ட அலுவலா்கள் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலா் உட்பட போதிய காவலா்கள் பணியில் இருந்தனா்.
அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.