சாலையோரம் வீசப்பட்ட இறைச்சிக் கழிவுகள் அகற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றி சுத்தம் செய்தனா்.
தேவூா் சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானது.
இதையடுத்து, தேவூா் பேரூராட்சி நிா்வாகம் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தது. தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு இறைச்சிக் கழிவுகள் அகற்றப்பட்டு, அப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.