கதண்டு கூடு அழிப்பு
தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியில் கதண்டு கூடு அழிக்கப்பட்டது.
செந்தாரப்பட்டியில் 3ஆவது வாா்டு பேரூராட்சிக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விமல்ராஜ் என்பவரது வீட்டில் கதண்டு கூடு கட்டியிருந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் மா.செல்லப்பாண்டியன் தலைமையிலான வீரா்கள் செவ்வாய்க்கிழமை கதண்டு கூண்டு மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அழித்தனா்.