சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
பெங்களூரு- மதுரை இடையே இன்று கோடை சிறப்பு ரயில்
சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு- மதுரை இடையே கோடை சிறப்பு ரயில் புதன்கிழமை (ஏப்.30) இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சேலம், நாமக்கல், கரூா் வழியாக பெங்களூரு - மதுரை இடையே இயக்கப்படும் கோடை சிறப்பு ரயில் பெங்களூரில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா் வழியாக மதுரைக்கு வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் மதுரை- பெங்களூரு சிறப்பு ரயில் வரும் மே 1 ஆம் தேதி இயக்கப்படுகிறது. மதுரையில் காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களுருக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.