உணவக உரிமையாளா் தற்கொலை
மேட்டூா் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மேட்டூா் அருகே தேங்கல்வாரையைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் பழபூபேஷன் (26). திருமணம் ஆகாதவா். கோபிசெட்டிபாளையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உணவகம் நடத்தி வருவந்தாா். பின்பு சொந்த ஊருக்கு திங்கள்கிழமை இரவு வந்துள்ளாா். மறுநாள் காலை வெகுநேரம் ஆகியும் அவரது வீடு திறக்கப்படவில்லை. இதனால் அவரது தந்தை துரைராஜ் வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்தபோது அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது இடது கை மணிக்கட்டில் பிளேடால் கிழித்துள்ளாா்.
தகவல் அறிந்ததும் கருமலைக்கூடல் போலீஸாா் நிகழ்விடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].