புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது
கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இவரது கடையில் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து துரையை கைது செய்தனா்.