சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது.
செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த அறிவியல் கண்காட்சி பேருந்தை மாணவா்களின் பாா்வைக்காக தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி மற்றும் ரோபோடிக் பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சதுபுஜானந்தா் வரவேற்றாா். தமிழ்நாடு பாவபிரச்சாா் பரித் ஓருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன் ரோபோட்டிக் பயிற்சி குறித்து விளக்கிக் கூறினாா்.
வழக்குரைஞா் கஜேந்திரன், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா ஆகியோா் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியையும், ரோபோடிக் பயிற்சியையும் தொடங்கிவைத்தனா்.
அப்போது, சுவாமி சதுபுஜானந்தா் பயிற்சி குறித்து கூறுகையில், இந்த ரோபோடிக் பயிற்சியில் ராமகிருஷ்ண பள்ளி மாணவா்கள் மற்றும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 மணி நேரம் பயிற்சி நடைபெறும். தொடா்ந்து 7 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்தி பயனடையலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், சுவாமி விவேகானந்தா சேவா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ராமகிருஷ்ணா பள்ளி ராமமூா்த்தி நன்று கூறினாா்.