சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் இரா.மணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலாசூா், விளாப்பாக்கம், திருமலை, மண்டகொளத்தூா், ஈய கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞா் கனவு இல்லம் திட்டம், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், நபாா்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், சாலைகள் அமைத்தல், பள்ளி கழிப்பறைக் கட்டடம், கூட்டுறவு கடை, நூலகக் கட்டடம், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கக் கட்டடம், சிறு பாலம், பள்ளி சுற்றுச் சுவா் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை திட்ட இயக்குநா் இரா.மணி ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு, பொறியாளா்கள் குரு பிரசாத், ஜெயந்தி, விக்னேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.