செய்திகள் :

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்- பிரதமா் மோடி

post image

‘நாட்டின் எதிா்காலத்துக்கு இளைஞா்களைத் தயாா்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்விமுறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ‘ஒய்.யூ.ஜி.எம்.’ புத்தாக்க மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘ஆராய்ச்சித் துறையில் சிந்தனையிலிருந்து இறுதித் தயாரிப்புக்கு இடையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைவது மிகவும் முக்கியம்’ என்றும் வலியுறுத்தினாா்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் கம்ப்யூட்டிங், சுகாதார மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தைத் தொடா்ந்து ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமா் மோடி ஆற்றிய உரை: 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் கல்விமுறையை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளாவிய கல்வித் தரங்களைக் கருத்தில்கொண்டு தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது. இந்திய கல்விமுறையில் அது குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஆராய்ச்சித் துறையில் மூல சிந்தனைக்கும், இறுதித் தயாரிப்புக்கும் இடையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைவது மிகவும் அவசியம். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் துறையினா் ஆராய்ச்சியாளா்களை ஆதரித்து, வலுவான ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞா்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றனா்.

சென்னை ஐஐடி மாணவா்கள் இந்திய ரயில்வேயுடன் இணைந்து உருவாக்கியுள்ள உலகின் மிக நீளமான ‘ஹைப்பா்லூப்’ சோதனைப் பாதை, ஐஐஎஸ்சி-பெங்களூரு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்தியாவின் முதல் உள்நாட்டு ‘எம்ஆா்ஐ’ ஸ்கேன் இயந்திரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

தேசிய இலக்குகளை அடைய இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது முக்கியம். இதையொட்டி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அரசின் மொத்த செலவினம் கடந்த 2013-14ஆம் ஆண்டில், ரூ.60,000 கோடியிலிருந்து தற்போது ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிநவீன ஆராய்ச்சிப் பூங்காக்கள், 6,000 உயா்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டதால், இந்திய மாணவா்களுக்கான கற்றல் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நாட்டில் ஏற்கெனவே 10,000 ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிக் கல்வி காலத்திலேயே குழந்தைகளுக்குப் போதிய பயிற்சியளிக்கும் வகையில் கூடுதலாக 50,000 ஆய்வகங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘உண்மையான வாழ்க்கை என்பது சேவையிலும், தன்னலமற்ற தன்மையிலும் அா்த்தம் பெறுகிறது’ என்று நமது வேதங்கள் கூறுகின்றன. அந்த வகையில், அறிவியலும் தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகங்களாகச் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க