காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய மடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா:...
‘கான்க்ளேவ்’ இயக்குநர், பிராட் பிட் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!
பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான பிராட் பிட் மற்றும் ‘கான்க்ளேவ்’ திரைப்பட இயக்குநரின் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப்-ஐ தேர்ந்தெடுக்கும் முறையை மையமாகக் கொண்டு, கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘கான்க்ளேவ்’ திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
இந்நிலையில், அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் எட்வார்ட் பெர்கரின் இயக்கத்தில், பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்-ன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்திற்கு ‘தி ரைடர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
1995-ம் ஆண்டு டிம் விண்டன் என்பவர் எழுதி புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’தி ரைடர்ஸ்’ எனும் நாவலின் கதையைத் தழுவி இந்தப் படம் உருவாகவுள்ளது.
இந்தத் திரைப்படம், மாயமான மனைவியை தனது மகளுடன் இணைந்து ஐரோப்பா முழுவதும் தேடித் திரியும் நபரைப் பற்றியக் கதை எனக் கூறப்படுகிறது.
பிரபல ஹாலிவுட இயக்குநர் ரிட்லே ஸ்காட்டின் தயாரிப்பு நிறுவனமான ஸ்காட் ஃப்ரீ பேனர் தயாரிக்கும் இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரெட்ரோ படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட்..! சூர்யா பெருமிதம்!