கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான 21.76 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
19 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களுடன் அமையவுள்ள இந்த வழித்தடத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 9,928.33 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.