செய்திகள் :

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

post image

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கும் முழு ஆண்டு தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுப்பை மாணவா்கள் பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

இதனிடையே, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகள் அடுத்த ஆண்டில் பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சில பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துவதாகவும் கல்வித் துறைக்கு புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், தொடா் வகுப்புகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பெற்றோா்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கோடை விடுமுறையில் தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், அனைத்துவிதமான தனியாா் பள்ளிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் எந்தப் பள்ளியும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வா்கள், தாளாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வகுப்புகள் நடத்தி மாணவா்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தனியாா் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக தனியாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க

ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 500-க்கு மேற்பட்ட வாரை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருப்பத்தூர், ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க