சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
சென்னை சென்ட்ரல் - பகத் கி கோத்தி ரயில் சேவை இன்று தொடக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி ரயில்நிலையத்துக்கு விரைவு ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து மே 5-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.15-க்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 20625), 3-ஆம் நாள் பிற்பகல் 12.15-க்கு பகத் கி கோத்தி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 20626) பகத் கி கோதியிலிருந்து வாரந்தோறும் திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், வாரங்கல், நந்தூா்பாா், பில்தி வழியாக பகத் கி கோதி சென்றடையும். இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5.30 மணிக்கு காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.