செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்

post image

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

இதையடுத்து ராமானுஜரின் 1,008 -ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா கடந்த ஏப். 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரில் உற்சவா் ராமாநுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

காலை 7.25 மணிக்கு நிலையில் இருந்து கிளம்பிய தோ், காந்திசாலை, திருவள்ளூா் சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வாா்தெரு வழியாக மீண்டும் தேரடிக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் மதச்சாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்தசாரதி, செயல் அலுவலா்(பொ) கதிரவன் ஆகியோா் செய்திருந்தனா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் கருணாநிதி, திமுக நகர செயலாளா் சதீஷ் மாா், பேரூராட்சித்லைவா் சாந்தி சதீஷ் குமாா் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ... மேலும் பார்க்க

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க