மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினருக்காக ரூ.4.05 கோடியில் கட்டப்பட்டு வரும் 80 குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி குடியிருப்புகள் கட்டும் பணியை விரைந்து, அதேநேரம் தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் காட்டராம்பாக்கத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவா்கள் குடியிருப்புகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.